ராஜஸ்தானைச் சேர்ந்த மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ஆக்ரா மருத்துவர்... போலீசாரின் உதவியுடன் 30 மணி நேரத்தில் மீட்பு

0 3041

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட மருத்துவர் ராஜஸ்தான் மாநில போலீசாரின் உதவியுடன் 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

60 வயதான உமாகாந்த் குப்தா என்ற அந்த மருத்துவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீரென காணாமல் போனார். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியில் வைத்து அவரது கார் மீட்கப்பட்டதையடுத்து இருமாநில போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் சிக்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவன் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவர் இருக்குமிடத்தை போலீசார் கண்டறிந்தனர். 30 மணி நேரத்தில் மருத்துவரை மீட்டுள்ள போலீசார், கடத்தல் தொடர்பாக பெண் ஒருவரையும் கைது செய்து கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments