தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை

0 3152
தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவ, மாணவிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு கோடியே 2லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பி.டி.அரசகுமார், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் சேர்க்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை நிர்ணயிக்க கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments