கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து கதறி அழுத தாய்... நெகிழ்ச்சி சம்பவம்

0 6888

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17ஆம் ஆண்டு நினைவு நாளில் தனது குழந்தையின் படத்தைப்  பார்த்து தாய் ஒருவர் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இதே நாளில் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கிய கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்த கோர சம்பவத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பள்ளி இருந்த கட்டிடம் முன்பு பெற்றோர் தங்களது குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments