மும்பையில் விடிய விடிய கனமழை - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

0 2015

மும்பையில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இரவு முழுவதும் பெய்த கனமழை காலைநேரத்திலும் தொடர்ந்ததால், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. காந்தி மார்க்கெட் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் வாகனங்கள் நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரயில் தண்டவாளங்களிலும் நீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காலை நேரத்தில் பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

தானே நகரில் ஈஸ்டர்ன் விரைவுச்சாலையில் அதிகாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து 20 டன் தக்காளி சாலையில் கொட்டியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் உடனடியாக வடிய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments