விண்வெளிக்கு அமேசான் அதிகாரி ஜெஃப் பெசோசுடன் செல்லும் 18 வயது இளைஞர்..!

0 3022

மனிதர்களுடன் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ள விண்கலத்தில் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் (JEFF BEZOS) உடன் ஆலிவ் டையமென் ( Olive Daemen) என்ற 18 வயது இளைஞர் ஒருவரும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சுமார் 28 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு இடத்தை அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஏலம் விட்டது.  இதில் முதல் பயணத்துக்கு 18 வயது வாடிக்கையாளரை தேர்வு செய்திருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆலிவரிடமிருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. வரும் 20ம் தேதி இந்த விண்கலம் ராக்கெட் மூலம் அமெரிக்கா -டெக்ஸாஸின் மேற்கு பாலைவனப்பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments