முதல் முறையாக ஒரே சமயத்தில் 66 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு

0 2712

முதல் முறையாக ஒரே சமயத்தில் 66 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மக்களுக்கு செலுத்த 135 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்பு வைக்கப் போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதனை முன்னிட்டு  14,505 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 66 கோடி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது. ஏற்கனவே ஹைதரபாத்தைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனத்திடம் இருந்து 30 கோடி கோர்பிவாக்ஸ் தடுப்பூசிகளை வாங்க முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மத்திய தொகுப்பில் 96 கோடி தடுப்பூசிகள் இருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தனியார் மருத்துவமனைகள் தரப்பில் 22 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments