ஒரே மாதத்தில் 20 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ்அப்

0 4997

சர்ச்சைக்குரிய சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ள வாட்ஸ் அப் நிர்வாகத்திற்கு  மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலத்தில் பண மோசடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கில் புகார்கள் வந்தன.

இதையடுத்து தம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் 20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் அப், உலகம் முழுவதும் 80 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்கள் புகார்களைப் பெற இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அண்மையில் மத்திய அரசு டிஜிட்டல் சட்டத்தை இறுக்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments