குஜராத்தில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 2080

குஜராத் மாநிலத்தின் வாத்நகர் ரயில் நிலையத்தை அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையமாக இன்று பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

இந்த ரயில் நிலையத்தில்தான் அவர் தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய தந்தைக்கு இந்த ரயில் நிலையத்தில் சிறிய தேநீர்க்கடை இருந்தது. தமது பள்ளி நாட்களில் மோடி இங்கு தேநீர் விற்று வந்தார். இன்று அவர் பிரதமராக உயர்ந்த நிலையில், பழைமைத் தோற்றம் மாறாமல் சுமார் எட்டரை கோடி ரூபாய் செலவில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சில புதிய ரயில் தடங்களையும் இந்த ரயில் நிலையம் வழியாகப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது குறித்த தமது டிவிட்டர் பதிவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். காந்தி நகரில் 5 நட்சத்திர விடுதி, அகமதாபாதில் அறிவியல் நகரம், உள்ளிட்ட மேலும் சில திட்டங்களையும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments