ம.பி.யில் கிணற்றின் சுவர் சரிந்து 25 க்கும் மேற்பட்டோர் விழுந்த பரிதாபம்... மீட்பு பணி தீவிரம்

0 2001

மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமத்தின் கிணற்றுக்குள் விழுந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்கப் போராடி வருகின்றனர்.

விதிஷா மாவட்டத்தில் கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் கிணற்றின் சுவர் மீது ஏராளமானோர் ஏறி நின்று வேடிக்கை பார்த்த போது திடீரென சுவர் சரிந்து 25 பேர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டனர்.

அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கிணற்றுக்குள் இன்னும் 15 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments