பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து.

0 1951

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவஜோத் சித்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமது ஆதரவாளர்களைத் திரட்டிய அம்ரிந்தர் சிங் மொஹாலியில் உள்ள பண்ணை வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார். சித்துவுக்கு கட்சியில் உயர்ந்த பதவி தரப்படுவதில் அமரேந்தர் சிங்கிற்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே சண்டிகரில் நவஜோத் சித்துவும் பஞ்சாப் அமைச்சர் சுக்ஜின்தர் ராண்டவா, சரஞ்சித் சன்னி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தமது அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

சித்துவின் ஆதரவாளர்கள் இனிப்புகளை விநியோகிக்கத் தொடங்கி விட்ட போதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படி தொண்டர்களிடம் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments