புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு

0 3742
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள் குளிர் சாதன வசதியின்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், காய்கறி - பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், உணவகங்கள், மதுகூடங்களுடன் கூடிய விடுதிகள் இரவு 9 மணி வரை 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சில்லரை மதுக்கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலா தளங்கள், 50 சதவீத மக்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments