தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா ; 3,006 பேர் டிஸ்சார்ஜ்

0 3352
தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா ; 3,006 பேர் டிஸ்சார்ஜ்

கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 405 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 256 ஆக சரிந்தது.

சென்னையில் 148 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று கணிசமாக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 3 ஆயிரத்து 6 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு மேலும் 49 பேர் பலி ஆகி உள்ளதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments