சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 1979
சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம்

சென்னை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 591 காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் எந்தவித துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படாமல் பணிபுரிந்த காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 591 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அப்போது காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பதக்கங்களை வழங்கி கவுரவித்த பின்னர் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பதக்கங்களை பெற்றுவிட்டோம் என பெருமிதத்தோடு இல்லாமல், மக்களுக்கான பணியில் உத்வேகத்தோடு இயங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments