டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட அடையாறில் போக்குவரத்து சீரானது

0 2657
டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட அடையாறில் போக்குவரத்து சீரானது

சென்னை அடையாறில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், சாலையில் படர்ந்திருந்த எண்ணெய் கசிவுகள் மீது மணல் போட்டு மூடப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது.

மேடவாக்கத்தில் இருந்து துறைமுகம் நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது. சாலையில் கசிந்த எண்ணெய் கசிவுகளை அகற்றும் பணி நடைபெற்றதால் காலையில் இருந்தே அடையாறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன. இந்த நிலையில், எண்ணெய் கசிவுகளை மணலை கொட்டி மூடியுள்ள போலீசார், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அடையாறு பகுதியில் போக்குவரத்து சீராகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments