தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

0 2700
தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் மத்திய அமைச்சருடனான சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான மருத்துவ துறைக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே போன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நீட் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments