15 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி.. சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவு..!

0 4398
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோயில் பூசாரியை சாகும்வரை சிறையில் அடைக்க, ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தூத்துக்குடியை சேர்ந்த பூசாரி ஒருவரை சாகும்வரை சிறையில் அடைக்க ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசாணமுத்து அங்குள்ள சுடலை மாடன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் கேட்டுள்ளார். இதற்கு, ராமேசுவரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார்.

இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, அந்தப் பெண் தனது 15 வயது மகளையும் அழைத்துக்கொண்டு பூசாரியுடன் ராமேஸ்வரத்துக்கு சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்கியிருக்கின்றனர். அப்போது, பூஜை செய்ய வேண்டுமென்று கூறி தனி அறையில் வைத்து மாசாணமுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து தாய் அளித்த புகாரில், ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து மாசாணமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, பூசாரி மாசாணமுத்துவை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments