நீலகிரி, கோவை மாவட்டத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2136
நீலகிரி, கோவை மாவட்டத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-ந் தேதி நீலகிரி, கோவை, சேலம் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments