மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு..!

0 3244

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்களுக்கு பொதுமக்கள் அதிகம் படையெடுப்பதாக வந்த தகவலையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் காவல்துறையிடன் இணைந்து குழு அமைத்துள்ளது. இக்குழு வார இறுதி நாட்களில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கொரோனா வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகளில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் கடைகள் செயல்படுகின்றனவா என்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.

தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி, தனிநபர் இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சீரான நிலையில் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கண்காணிப்பு குழுக்களின் ஆய்வின்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்காவிட்டால் தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 2இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments