வாரணாசியில் ரூ.1500 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

0 2638
வாரணாசியில் ரூ.1500 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசியில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மோடி, கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனா நம்மீது மீண்டும் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்க கூடாது என்றார் அவர்.உத்தர பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொரோனா 2 ஆம் அலையை அசாத்தியமான முறையில் கட்டுப்படுத்தியதாக மோடி பாராட்டு தெரிவித்தார்.

வாரணாசியில் ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டுள்ள நவீன கூட்ட அரங்கையும் மோடி திறந்து வைத்தார். இந்த கூட்ட அரங்கின் மேற்கூரை சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 109 ருத்ராக்ஷைகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments