பிரிட்டிஷ் கால தேசதுரோக சட்டத்தை விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனபின்னரும் இனியும் வைத்திருப்பது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

0 3096

பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தேசதுரோக சட்டம், விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையிலும் நாட்டுக்கு  தேவையா என மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தேசதுரோக சட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது மகாத்மா காந்தியை தண்டிக்க பிரிட்டிஷார் கொண்டு வந்த இந்த சட்டத்தை இப்போதும் ஏன் வைத்திருக்கிறீர்கள்? என அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காலாவதியான பல சட்டங்கள் நீக்கப்பட்ட பின்னரும் இதை தாங்கிப் பிடிப்பது ஏன் என தலைமை நீதிபதி ரமணா வினவினார். காவல் துறையால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய நீதிபதிகள்,பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை இனியும் அனுமதிக்கலாமா என ஆராய உள்ளதாகவும்  தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments