கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.. சென்னை அடையாறில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

0 3566
சென்னை அடையாறில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை அடையாறில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேடவாக்கத்தில் இருந்து துறைமுகம் நோக்கி சென்ற லாரி கவிழ்ந்ததில், சாலையில் எண்ணெய் கசிந்தது. விபத்துக்குள்ளான லாரியையும், சாலையில் கசிந்த எண்ணெய் கசிவுகளையும் அகற்றும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதிகள் பேரிகார்டுகள் போடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இதனால், காலையில் இருந்தே அடையாறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டது.

எண்ணெய் கசிவுகளை முழுமையாக சுத்தம் செய்த பிறகே, அந்த வழியில் வாகன போக்குவரத்து சீராகும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments