இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த கூடாது- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2490
இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த  தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாக ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி அமர்வில் நடந்த விசாரணையில், இந்த ஆக்கிரமிப்பு குறித்த ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதை கேட்ட நீதிபதிகள், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் என கூறி, பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments