டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தலை நடத்துவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது - தேர்தல் ஆணையம்

0 2713
டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தலை நடத்துவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது - தேர்தல் ஆணையம்

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க அதிமுக உறுதியளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்த மனுதாரர், உட்கட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக நிர்வாகிகள் நியமனம் செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி விடுவதாக அக்கட்சி உறுதியளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments