இருசக்கர வாகனங்களில் சைடு மிரர்களை அகற்றினால் வாரண்டி கிடையாது : எச்சரிக்கும் உயர் நீதிமன்றம்

0 5497

இருசக்கர வாகனங்களில் சைடு மிரர்களை  அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும் வகையில், வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்துமாறு தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சைடு மிரர் இல்லாத வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு  500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி  அமர்வு,  இருசக்கர வாகனங்களில் சைடு மிரர்கள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்துமாறு போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. தேவைப்பட்டால், இது சம்பந்தமாக  வாரண்டி விதிகளை உருவாக்கலாம் எனவும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments