ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக, விகாஸ் எஞ்சினின் 3 ஆம் கட்ட சோதனை வெற்றி - ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், இஸ்ரோவுக்கு பாராட்டு

0 1792
ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக, விகாஸ் எஞ்சினின் 3 ஆம் கட்ட சோதனை வெற்றி - ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், இஸ்ரோவுக்கு பாராட்டு

ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக, விகாஸ் எஞ்சினை இந்தியா வெற்றிகரமாக சோதித்து பார்த்ததற்கு, ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், இஸ்ரோவுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள அவர் இந்திய தேசிய கொடியையும் அதில் பதிவிட்டுள்ளார். விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ள விகாஸ் எஞ்சின் 240 விநாடிகள் இயக்கப்பட்டு, திட்ட இலக்கை துல்லியமாக எட்டியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எலான்  மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்கைகோள் தகவல் தொடர்பு சாதனங்களை இந்தியாவில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments