பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

0 2173

பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

காமராஜரின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, தி.நகரில் அமைந்துள்ள காமராஜரின் நினைவில்லத்திற்கு சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள காமராஜரின் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் தனது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments