அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்படுத்தி கடந்த ஒரே ஆண்டில் 93,000 பேர் பலி

0 2012
போதைப் பொருள் பயன்படுத்தி கடந்த ஒரே ஆண்டில் 93,000 பேர் பலி

மெரிக்காவில் கடந்த ஒரே ஆண்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதில் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தேசிய உயிரியல் புள்ளிவிவர அமைப்பின் அறிக்கையின்படி, வெர்மான்ட், கென்டக்கி, தென் கரோலினா, மேற்கு வர்ஜீனியா மற்றும் கலிபோர்னியாவில் போதைப் பொருள் பயன்படுத்தியதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

ஒபியாய்டு எனப்படும் போதைப் பொருளால் இதுவரை அதிகரித்திருந்த உயிரிழப்பு தற்போது சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் ஃபென்டானைல் என்ற போதைப் பொருளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபென்டானைல் பயன்படுத்தியதில் மட்டும் கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் உயிரை மாய்த்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments