இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு கொரோனா

0 7261

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் ரிஷப் பந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரிஷப் பந்த் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும், மற்ற வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனவும் பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், சமீபத்தில் யூரோ கோப்பை கால்பந்து போட்டிக்கு பார்வையாளராக சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments