சாலையில் உயிருக்குப் போராடிய ஆதரவற்ற முதியவருக்கு முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்... குவியும் பாராட்டு

0 2411

மதுரையில் தலையில் பலத்த காயத்துடன் வலிப்பு ஏற்பட்டு சாலையில் கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

காமராஜர் சாலையில் தலையில் பலத்த காயத்துடன் ஆதரவற்ற முதியவர் ஒருவர் வலிப்பு வந்து உயிருக்கு போராடி உள்ளார். அந்தபகுதியில் ரோந்து வந்த காவல் ஆய்வாளர் தங்கமணி முதியவரின் நிலை கண்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் மனிதநேய மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments