டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியீடு

0 3634

ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோ செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் காணொலி மூலம் வெளியிட்டார்.

இந்துஸ்தானி வழி என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார்.

ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான கொரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அனுராக் தாகூர், இந்த பாடலை அதிகளவில் பகிருமாறு கேட்டுக் கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments