நில எடுப்புக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2720
நில எடுப்புக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்

அனைத்து மாவட்டங்களிலும் நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு மறு நில அளவை செய்ய தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தினார்.

ஏழை எளியோருக்கு வீட்டு மனை மாற்று இடம், விரைவான பட்டா மாறுதல், நில எடுப்புக்கு நியாயமான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவற்றை திறம்பெற செயல்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments