தமிழ்நாட்டில் மேலும் 2,458 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி.. 55 பேர் பலி..!

0 3359

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500 க்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 270ஆகவும், சென்னையில் 153 ஆகவும் பதிவானது.ஒரே நாளில் 3 ஆயிரத்து 21 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு மேலும் 55 பேர் பலியாகினர். மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு 30 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments