முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமையன்று திமுக எம்.பிக்கள் கூட்டம்

0 2273

திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் திமுக எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments