தலைவனை அடிக்கிறியா ? டிவியை உடைத்த சிறுவன்..! சோனுசூட் ரசிகன் ராக்ஸ்..!

0 3105

டிகர் சோனுசூட்டை தாக்கிய நடிகர் மகேஷ்பாபுவை கண்டித்து 7 வயது சிறுவன் ஒருவன் டிவியை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வடிவேலு காமெடிக்கு டஃப் கொடுத்த சிறுவனின் சேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தமிழ் சினிமா ஒன்றில், டிவியில் எம்.ஜி.ஆர் சண்டை காட்சியை, விசில் அடித்து ரசித்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் வடிவேலு, எம்.ஜி.ஆர் கையில் இருந்த வாள் தவறியதும் டிவியை நோக்கி அரிவாளை தூக்கி எறிந்து டிவியை உடைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் காமெடி மிகவும் பிரபலம்... அதே போல 7 வயது சிறுவன் ஒருவன் சோனு சூடுக்காக டிவியை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குருவைய்யா, புஷ்பலதா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ,இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்காக சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். உறவினர் வீட்டில் குருவையாவின் ஏழு வயதான மகன் விராட் டிவியில் தெலுங்கு திரைப்படமான தூக்குடு என்ற சினிமாவை பார்த்துக் கொண்டிருந்துள்ளான்.

சோனு சூட்டின் தீவிர ரசிகனான அந்த சிறுவன், படத்தின் சண்டை காட்சியில் கதாநாயகன் மகேஷ் பாபு, தனது அபிமான நடிகர் சோனு சூட்டை அடித்து உதைத்து தூக்கி வீசுவதை கண்டு காண்டாகியுள்ளான். ஒரு கட்டத்தில் தனது அபிமான நடிகர் அடித்து நொறுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்த சிறுவன் வீராட் , ஓடிச்சென்று வெளியில் இருந்து கல் ஒன்றை எடுத்து வந்து டிவியில் தோன்றிய மகேஷ்பாபுவை நோக்கி வீசியுள்ளான்.

அடுத்த நொடி அந்த டிவி உடைந்து நொருங்கியதாகவும், சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் ஏன் டிவி யை உடைத்தாய் என அந்த சிறுவனிடம் கேட்டதற்கு, சோனு சூட் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவரை அடிக்கும் காட்சிகள் தனக்கு பிடிக்கவில்லை அதனால் கல்லை கொண்டு மகேஷ் பாபு மீது எறிந்ததாக தெரிவித்துள்ளான். அவனது பதிலை கேட்ட டிவிக்கு சொந்தக்காரரான உறவினரோ அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரியாமல் தலையில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல் கொரோனா காலத்தில் சோனு சூட் பலருக்கும் உதவியதாக தந்தை மூலம் அறிந்ததால் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்த சிறுவன் விராட்டிடம் சோனு சூட்டின் ஏதாவது ஒரு திரைப்பட டயலாக்கை சொல் என்று கேட்டதற்கு "பொம்மாயி ,பொம்மாயி " என்ற டயலாக்கை விராட் கூறினான். சோனு சூட்டுக்காக டிவியை சிறுவன் உடைத்த சம்பவம் தொடர்பான தகவல்களை சிலர் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் சோனு சூட் டிற்கு டேக் செய்துள்ளனர்.

அதற்கு சோனு சூட்டுவோ, டிவியை உடைக்க வேண்டாம், அப்புறம் உங்கள் தந்தை என்னிடம் தான் டிவி வாங்கித்தரச்சொல்லி கேட்பார் என்று டுவிட் செய்து தனது ரசிகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் சண்டை காட்சிகளில் சோனு சூட் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. சினிமா கதாநாயகர்களுக்காக கோஷம் எழுப்பும் ரசிகர்கள் மத்தியில் சமூக சேவையால் உள்ளம் கவர்ந்த வில்லன் நடிகருக்காக 7 வயது ரசிகன் டி.வியை உடைத்தது, சோனு சூட் செய்யும் நலத்திட்ட உதவிகளுக்கான உண்மையான அங்கீகாரம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments