ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தவறான முடிவு-ஜார்ஜ் டபிள்யூ புஷ் விமர்சனம்

0 2346
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை திரும்ப பெறுவது தவறான முடிவு என முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் விமர்சித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை திரும்ப பெறுவது தவறான முடிவு என முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் விமர்சித்துள்ளார்.

இந்த முடிவால் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிருகத்தனமானவர்களால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்பதால் தனது இதயமே நொறுங்குவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை அடக்க, அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் படைகளை அனுப்பினார். 20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மே மாதம் முதல் அந்த படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

செப்டம்பருக்குள் முழுவதுமாக படைகளை விலக்க திட்டமிட்டுள்ள நிலையில், தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments