மூதாட்டிகளிடம் நூதனக் கொள்ளை.. எந்த ரூபத்திலும் ஆபத்து வரும்.! கவனம் தேவை.! உஷார்.!

0 6827

சென்னையில் தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, போலீசார் என பொய் சொல்லி, உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் நகைகளை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டிகளிடம் பயத்தை உண்டாக்கி, அதிலிருந்து குளிர்காயும் கும்பலின் கொள்ளை பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 70 வயதான ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை பிரேமகுமாரி. 2 நாட்களுக்கு முன் விருகம்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி பிரேமகுமாரியிடம், அடையாளம் தெரியாத 2 பேர் வந்து, போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதோடு, வழிப்பறி கும்பல் பின் தொடர்ந்து வருவதாகவும், உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கூறி பீதியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை நம்பி மூதாட்டியும் பதற்றமடைந்த நிலையில், பயத்தை சாதமாக்கிக் கொண்ட மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழட்ட வைத்து அவரது பையில் போடுவதாக கூறிவிட்டு, அபேஸ் செய்துள்ளனர்.

வீட்டுக்கு வந்து காகிதத்தில் மடித்து வைத்தாக கூறப்படும் நகையை பிரித்து பார்த்த பின்னர் தான் மூதாட்டிக்கு தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்தது.

நகைக்கு பதிலாக காகிதத்தில் கற்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, தனது 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்துள்ளார். இதேபாணியில் கே.கே.நகரில் தனியாக நடந்து சென்ற அலமேலு என்ற மூதாட்டியிடம், உங்களை வழிபறி கும்பல் துரத்திக்கொண்டு வருகிறார்கள், ஆட்டோவில் ஏறுங்கள் பாதுகாப்பாக வீட்டில் விட்டுவிடுகிறோம் என ஆட்டோவில் ஏற்றிச் சென்ற கொள்ளையர்கள், அவர் அணிருந்திருந்த வளையல், தாலிச் செயின் உள்ளிட்ட 8 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிவிட்டனர்.

இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் கைவரிசை காட்டியுள்ளனர் என சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ள போலீசார் வழிபறி கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments