முகநூலில் அக்கா, தங்கையை நம்ப வைத்து பங்கம்: செல்போன் சர்வீஸ் கடைக்காரன் கைது

0 4284

சென்னையில் செல்போன் சர்வீஸ் கடையில் வேலைபார்த்துக் கொண்டே, பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால், திருப்பூரில் அக்கா-தங்கை என இருவரின் வாழ்க்கையில் ஆன்லைன் கேம் விளையாடிய 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்திறகு பிறகு கணவனிடம் சிக்கிய செல்போனால் இளம் பெண் வாழ்வில் அடித்த புயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருப்பூரைச் சேர்ந்த, 19 வயது பெண் திருமணமாகிச் சென்ற நிலையில், ஒருநாள் எதேச்சையாக அப்பெண்ணின் செல்போனை ஆராய்ந்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணின் ஆடையில்லாத படங்கள் வேறு ஒரு எண்ணுக்கு செல்ஃபோனில் அனுப்பப்பட்டிருந்ததை கணவன் கண்டறிந்ததால், அந்த பெண் தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பியுள்ளார். பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சம்மந்தப்பபட்ட பெண்ணின் அக்கா, கோவையில் கல்லூரியில் படிக்கும்போது ஃபேஸ்புக் மூலம் செந்தில்குமார் என்ற நபருக்கு அறிமுகமாகியதாகக் கூறப்படுகிறது.

அப்போது 17 வயது சிறுமியாக இருந்த இந்த பெண்ணும், அக்காவுக்கு தெரியாமலேயே செந்தில்குமாருக்கு ஃபேஸ்புக்கில் பழக்கமாகியுள்ளார். முகநூலின் இன்பாக்சில் மாறி மாறி மயக்கும் மெசேஜ்களை அனுப்பி, இருவரின் அந்தரங்க புகைப்படங்களையும் செல்போன் மூலம் பெற்ற செந்தில்குமார், அதை வைத்து மிரட்டி பல்வேறு லீலைகளை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. குற்றவாளியின் மிரட்டலுக்கு பயந்து சகோதரிகள் இருவரும், தற்போது தடை செய்யப்பட்டுள்ள வி சேட் (we chat) சீன செயலி மூலம் தாங்கள் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவை தனித்தனியே அனுப்பியதாகக் கூறப்படுவது அதிர்ச்சியின் உச்சம்.

2 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்து, 17 வயது சிறுமியை பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கியுள்ளான், பெட்டிப் பாம்பு போல இருக்கும் இந்த செந்தில்குமார். புகார் அளித்த பெண்ணுக்கு திருமணம் ஆன பிறகும் செந்தில்குமாரின் நச்சரிப்புகள் தொடர்ந்துள்ளன. அந்தப் பெண்ணையும் அவரது சகோதரியையும் மிரட்டி 32 சவரன் நகைகள் மற்றும் பணமும் பறித்துள்ளான். இந்த விவரங்களை மகளிடம் இருந்து தெரிந்துகொண்ட பெற்றோர் செந்தில்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

17 வயது சிறுமியாக இருந்தபோது அத்துமீறியதன் அடிப்படையில் செந்தில்குமார் இப்போது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளான். சம்மந்தப்பட்ட இரு பெண்களும், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், படிக்கும் காலத்திலேயே ஸ்மார்ட்போன் உள்ளிட்ட வசதிகளுடன் வளர்ந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. பெற்றோரும் உரிய கண்காணிப்பின்றி இருந்ததால் இப்போது சகோதரிகளின் வாழ்க்கை புயலில் சிக்கிய தோணி போல திசைமாறிவிட்டது.

வளர்இளம்பருவத்தில் பிள்ளைகளுக்கு உரிய சுதந்திரத்தை அனுமதிப்பது போல, உரிய முறையில் கண்காணிக்கவும் தவறினால் எத்தகையை விபரீத விளைவு ஏற்படும் என்பதற்கு அக்கா-தங்கை என இருவரின் வாழ்க்கையை பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து சீரழித்த கயவனின் டெக்னாலஜி விளையாட்டுகள் சிறந்த உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments