சைபீரிய காடுகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ; காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

0 1821
சைபீரிய காடுகளில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ


ரஷ்யாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்துக்குச் சொந்தமான தீயணைப்பு விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் குளிர்ச்சியான சைபீரிய காடுகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. 20 லட்சம் ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அருகில் உள்ள யாகுட்டியா (Yakutia) மாகாண மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments