கார் பந்தய மைதானம்தான் என்னுடைய களம் - நடிகை நிவேதா பெத்துராஜ்

0 3565
நடிகர் அஜித்தை போலவே ரேஸ் கார் ஓட்டும் நடிகை நிவேதா

நடிகர் அஜித்தை போலவே நடிகை நிவேதா பெத்துராஜ், ஃபார்முலா ரேஸ் கார் வீராங்கனையாகும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வந்தவர். அவரைப்போலவே நடிகை நிவேதாவும் தற்போது கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

அடியே அழகே என் அழகே அடியே பாடலின் மூலம் பிரபலமான நாயகி நிவேதா பெத்துராஜ், ரேஸ் காரில் மைதானத்தில் ரவுண்டு போன புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கோவையில் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சி முதல் நிலையை முடித்திருப்பதாகவும், சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் விருப்பம் என நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்த நிவேதா, அங்கு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என்றும் பெருமையாகக் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments