சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை-சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

0 2987
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை எனவும், அடிப்படை கல்வியே மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை எனவும், அடிப்படை கல்வியே மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலை பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலகங்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதிக்கக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சாலைகள், கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிகளை உரிய முறையில் அமல்படுத்த அறிவுறுத்தினர். அப்போது, நாட்டின் பொருளாதாரம் இன்னும் டேக் ஆப் நிலையிலேயே இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments