நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?, இதை கேட்டாவே தலை சுத்துது - வடிவேலு

0 3607
நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?, இதை கேட்டாவே தலை சுத்துது - வடிவேலு

தமிழ்நாட்டிற்குள் எத்தனை நாடுகள் உள்ளன என கிண்டலாக கேள்வி எழுப்பியதுடன் தனக்கு தலையே சுத்துவதாக கொங்கு நாடு குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகமே உற்றுநோக்கும் வகையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒன்றரை மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார். கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தியதோடு, தகுந்த நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்ததாக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த வடிவேலு, இது மக்களுக்கான பொற்க்கால ஆட்சி என்றார்.

கடந்த காலங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால் தான் பட வாய்ப்புகளை இழந்ததாக பேசப்படும் கருத்துக்கு பதிலளித்த வடிவேலு, இனிமேல் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனரா என்ற கேள்விக்கு, தான் நடித்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை சுட்டிக்காட்டி பதிலளித்தார்.

சினிமா ஓ.டி.டி. என்ற அடுத்த கட்ட பரிணாமத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற வடிவேலு, தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், காலத்திற்கும் தகுந்தாற் போல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். கடைசியாக, தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தமிழ்நாட்டிலேயே ராம்நாடு இருக்கு, ஒரத்தநாடு இருக்கு, நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும் என்றார். இப்படி பிரித்துக்கொண்டே போனால் என்னாவது? இதெல்லாம் கேட்டாவே தலையெல்லாம் சுத்துது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments