2-வது ஒரு நாள் போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய அயர்லாந்து

0 3815

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டி டப்ளினில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments