நீட் தாக்கம் குறித்து 165 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல்

0 2267

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.

நீட் தாக்க ஆய்வுக் குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றமும் மறுத்துவிட்ட நிலையில், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை  சமர்பித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.ராஜன்,  நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்ததாக கூறினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரசு தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார். தங்களுக்கு வந்த 86 ஆயிரத்து 432 மனுக்களில், நீட் தேர்வு வேண்டாம் என்பதாகவே, பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாகவே இருக்கிறது என்றும் ஏ.கே.ராஜன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments