அமெரிக்காவில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து

0 2004

அமெரிக்காவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டுச் சுவரில் மோதி வெடித்துச் சிதறியது.

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ட்ராய் என்ற இடத்தில் 52 ஆயிரம் லிட்டர் டீசலை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறிய அந்த லாரி சாலையின் பக்கவாட்டுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்த சில நொடிகளில் அந்த லாரி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments