திருட்டுப்போன சைக்கிளை கண்டுபிடித்து தர டுவிட்டரில் முதல்வரிடம் கோரிக்கை: உடனடியாய் மீட்ட காவல்துறையினர்

0 2341

திருவள்ளூரில் மாயமான சைக்கிளை கண்டுபிடித்து தர உதவுமாறு இளைஞர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரது சைக்கிளை காவல்துறை மீட்டனர்.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கடந்த 2ஆம் தேதி டிவிட்டரில் வெளியிட்ட திருவள்ளூரைச் சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர், சைக்கிளை மீட்க உதவுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் திருடப்பட்ட சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,அதனை திருடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments