அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட பி-81 விமானம் இந்தியா வருகை

0 2365
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்த நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட P-8I என்ற 10வது விமானம்

நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட P-8I என்ற 10வது விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவிடமிருந்து எட்டு P-8I விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் மேலும் 4 P-8I விமானங்கள் கூடுதலாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

ஏற்கனவே 9 விமானங்கள் வந்துள்ள நிலையில், இரண்டாவது ஒப்பந்தத்தின் கீழ் 2வது P-8I விமானம் நேற்று இந்தியா வந்தடைந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

நம்ப முடியாத அளவிற்கு உளவுப் பணியிலும், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கவும் மட்டுமின்றி, பேரழிவு நிவாரணம் மற்றும் மனிதாபிமான பணிகளின் போது இந்த விமானம் உதவும் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments