சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணம்

0 1779

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தி குறித்த சாதகமான தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லி செல்லும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி, 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட பாரத் பயோடெக் உட்பட 3 நிறுவனங்கள் தயாராக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்றைய டெல்லி பயணம் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments