சித்ராவை தொட்டதால்… புதைக்கப்பட்ட இளைஞர் திருட்டு காதல் கொலை..! சடலம் தோண்டி எடுப்பு

0 2404
சித்ராவை தொட்டதால்… புதைக்கப்பட்ட இளைஞர் திருட்டு காதல் கொலை..! சடலம் தோண்டி எடுப்பு

தாராபுரம் அருகே மனைவியின் காதலனை கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் தொடர்பாக, கணவன், மனைவி மற்றும் மனைவியின் 2 வது காதலன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாராபுரம் அடுத்த காதபுள்ளபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் . இவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் ரமேஷ் என்பவர் தனது மனைவி சித்ரா மற்றும் குழந்தையுடன் தங்கி இருந்து ஆடு மேய்த்து வந்தார்.

இந்த நிலையில் மனைவி சித்ராவை தோட்டத்து வீட்டில் தனியாக விட்டு விட்டு காட்டிற்கு ஆடு மேய்க்க செல்லும் ரமேஷ், மனைவிக்கு உதவியாக இருக்க 17 வயது உறவுக்கார சிறுவனையும், மணிகண்டன் என்ற 20 இளைஞனையும் வேலைக்கு சேர்த்துள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் மாயமானதாக கூறப்படுகின்றது. உறவினர்களிடம் அவர் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறி சமாளித்து வந்துள்ளார் ரமேஷ்.

இந்நிலையில், 17 வயது சிறுவனுடன் ஒருநாள் டாஸ்மாக் பாரில் அமர்ந்து ரமேஷ் மது அருந்தியுள்ளார். போதை உச்சிக்கு ஏறிய நிலையில் அந்த சிறுவனிடம், வீட்டில் ஒழுக்கமாக இரு, இல்லையென்றால் மணிகண்டனை எப்படி புதைச்சோமோ, அப்படி உன்னையும் புதைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ரமேஷ் சொன்னது குறித்து தோட்டத்து உரிமையாளரான பாலசுப்பிரமணியத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் ரமேஷை பிடித்து விசாரித்தனர். ரமேஷ் அளித்த தகவலின் பேரில் மணிகண்டன் மாயமான மர்மத்தின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

பாதுகாப்புக்காக வீட்டில் வைத்திருந்த மணிகண்டனுக்கும், தனது மனைவி சித்ராவுக்கும் தவறான தொடர்பு இருப்பது ரமேஷுக்குத் தெரிய வந்துள்ளது. கையும் களவுமாக ஒருநாள் பிடிபட்டபோது, மணிகண்டன் தன்னை மிரட்டி பணியவைத்ததாக சித்ரா கூறியுள்ளார். இதனை நம்பி மணிகண்டனை அடித்து கொலை செய்த ரமேஷ், அவனது சடலத்தை தோட்டத்தில் ஒரு பகுதியில் புதைத்துள்ளான். அதற்கு அந்த 17 வய்து சிறுவனும் உடந்தையாக இருந்துள்ளான்.

இந்த நிலையில் 17 வயது சிறுவனையும் , சித்ரா தனது காதல் வலையில் விழவைத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட ரமேஷ், இவனை எச்சரிக்கும் நோக்கில் போதையில் போட்ட சத்தம் 10 மாதங்களுக்கு முன்பு மணிகனடனை கொன்று புதைத்த சம்பவத்தை காட்டிக் கொடுத்து விட்டது. 3 கொலையாளிகளும் மணிகண்டன் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் அடையாளம் காட்டினர்.

அவர்கள் காட்டிய இடத்தில் மணிகண்டனின் சடலம் எலும்புத்துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது. அதனை ரசாயண பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச்சென்றனர்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ரமேஷ், சித்ரா, அந்த சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் வேறு ஏதாவது குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசரித்து வருகின்றனர். இந்த விபரீத கொலை சம்பவத்தால் தாயுடன் பெண் குழந்தையும் ஜெயிலுக்குள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments