ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

0 1223

ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். போட்டிகளில் வெற்றிபெற அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க டோக்கியோ செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று உரையாடினார். புதிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என வாழ்த்து தெரிவித்த பிரதமர், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் ஆசியும் வாழ்த்துகளும் உங்களுக்குத் துணை நிற்கும் என்று கூறினார்.

டோக்கியோ செல்லும் 126 வீரர், வீராங்கனைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 15 பேருடன் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். சானியா மிர்சா, மேரி கோம், பி.வி.சிந்து , மாணிக்கா பாத்ரா,வினேஷ் போகத், தத்தி சந்த், தீபிகா குமாரி, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். மேரி கோம் பிரதமருடன் பேசுகையில் தமக்குப் பிடித்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி என்று கூறினார்.

தடகள வீரர் வீராங்கனைகளுக்கு கோவிட் காரணமாக விருந்தளிக்க முடியாத வருத்தத்தை வெளிப்படுத்திய மோடி, டோக்கியோவில் இருந்து திரும்பி வந்ததும் தம்முடன் ஐஸ்கிரீம் சாப்பிட உறுதி அளித்திருப்பதாக சிந்து தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments