நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

0 2076
நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டிற்கும், முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி என்று
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே என முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments